Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ... விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு ரூ.13.24 லட்சம் காணிக்கை விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேப்பில் ஆவணமாகும் தமிழக கலாசார இடங்கள்
எழுத்தின் அளவு:
மேப்பில் ஆவணமாகும் தமிழக கலாசார இடங்கள்

பதிவு செய்த நாள்

15 அக்
2025
11:10

தமிழகத்தில் உள்ள கலாசார இடங்களை கண்டறிந்து, கூகுள் மேப்பில் ஆவணமாக்கும் பணியில், தமிழ் இணைய கல்வி கழகம் ஈடுபட்டுள்ளது.


தமிழ் இணைய கல்வி கழகத்தின் மின் நுாலகம் வாயிலாக, அரிய நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நுால்கள். பாடநுால் கழக வெளியீடுகள், பழைய பருவ இதழ்கள், சுவடிகள், பாரம்பரிய, பண்பாட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை, ஸ்கேன் செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. மேலும், தமிழ் மொழி கற்பிப்பதற்கான இணையவழி படிப்பு, இணையதளத்தில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான புதிய மென்பொருள்கள், எழுத்துருக்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி, இலவசமாக பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் செய்கிறது. அந்தவகையில், தகவலாற்றுப்படை எனும் தலைப்பில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திருவிழாக்கள், கலாசார விழாக்கள் நடக்கும் இடங்களை, கூகுள் மேப்பில் அடையாளப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.


இதை பயன்படுத்தி, பொதுமக்கள் எளிதாக அவ்விடத்திற்கு செல்லலாம். இது தவிர, கைவினை பொருள் தயாரிப்பில் சிறப்பு வாய்ந்த கிராமங்கள், கைவினை பொருட்களின் சிறப்பியல்புகள் உள்ளிட்டவற்றையும் ஆவணப்படுத்தி, தமிழக வரைபடத்தில், ஜி.ஐ.எஸ்., முறையில் பதிவேற்றும் பணியும் நடந்து வருகிறது.அத்துடன், கோவில், தேவாலயம், மசூதி, சமண, பவுத்த வழிபாட்டு தலங்களின் படங்கள், அவை குறித்த செய்திகள், பாரம்பரிய சிற்பங்கள், ஓவியக் கூடங்கள் உள்ள இடங்கள். சிலம்பம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, தப்பாட்டம், புரவியாட்டம், படுகர் ஆட்டம், கொக்கலிக்கட்டை ஆட்டம், தெருக்கூத்து, கரகம், கும்மி, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகள் நடக்கும் ஊர்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை நடக்கும் இடங்கள், அங்கு செல்லும் வழிகள் போன்ற விபரங்களையும், பதிவேற்றும் பணி நடக்கிறது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar