Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர் திருவிழா; முதல் ... காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்
எழுத்தின் அளவு:
ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி அயோத்தியில் மெழுகு அருங்காட்சியகம்

பதிவு செய்த நாள்

18 அக்
2025
10:10

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அருகே, ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து, முதல் மெழுகு சிலை அருங்காட்சியகம் நாளை திறக்கப்பட உள்ளது.


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், அயோத்தியின் மற்றொரு அடையாளமான ராமாயண இதிகாசத்தை மையப்படுத்தி முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


50 சிலைகள்; அயோத்தியின் சவுதா கோசி பரிக்ரமா பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த மெழுகு சிலை அருங்காட்சியகம், தென் மாநில கட்டட கலையை பிரதிபலிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இது, 9,850 சதுர அடி பரப்பளவில், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன், ஹனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின், 50 மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்த கேரள கலைஞர் சுனில் கூறுகையில், “அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் திரேதா யுகத்தில் அடியெடுத்து வைப்பதை உணர்வர். புராணம், தொழில்நுட்பம், கலைத்திறனை ஒருங்கிணைக்கும் தனித்துவ இடமாக இது விளங்கும்,” என்றார்.


அனுமதி; வண்ண ஒளி விளக்குகளுடன், 3டி தொழில்நுட்ப காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழுதும் குளிரூட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீ விபத்து தடுப்பு சாதனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ஒரு நபருக்கு, 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 100 பேர் வரை கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்படும். இந்த திட்டம் அயோத்தி நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தப் படுகிறது, அருங்காட்சியகத்தின் வருவாயில், 12 சதவீத நிதி, அயோத்தியின் வளர்ச்சிக்கு நேரடியாக பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar