சிறுவலூரில் காளியம்மனுக்கு மிளகாய் யாக பூஜை; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2025 10:10
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு அமாவாசை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் காளியம்மனுக்கு மிளகாய் யாக பூஜை நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற மிளகாய் யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கோரி மிளகாய்களை தானமாக வழங்கி வருகின்றனர்.பூஜயினை திருநங்கை ஷில்பா செய்துவருகிறார்.பூஜைக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில பக்தர்கள் சாமி வேடம் அணிந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் அன்னதானம் வழங்கி வருகிறது.