குஜராத்தில் பாரம்பரிய அன்னகூட திருவிழா; 3,000 கிலோ பிரசாதத்தை அள்ளி சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2025 12:10
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தில் 3,000 கிலோவுக்கும் அதிகமான பிரசாதம் பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டது.
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித யாத்திரைத் தலமான டகோரில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனித்துவமான பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, 3,000 கிலோவிற்கு மேல் பல்வேறு உணவுப் பொருட்களைக் கொண்ட ஒரு பிரமாண்டமான அன்னகூட பிரசாதம் தயாரிக்கப்பட்டு பகவான் ராஞ்சோத்ராஜிக்கு படைக்கப்பட்டது. இந்த பிரசாதம் பின்னர் அழைக்கப்பட்ட 80 கிராமங்களைச் சேர்ந்த மக்களால் எடுத்து செல்லப்பட்டது. இது பலங்காலமாக நடைபெறும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என பிரசாதத்தை எடுத்து சென்ற பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.