ஸ்ரீபுரம் நாராயணி தங்ககோவிலில் ஸ்ரீசக்கர வடிவில் 10008 தீபம் ஏற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2025 02:10
வேலூர்; ஸ்ரீபுரம் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் உலக மக்களின் நன்மைக்காக வேண்டி- ஸ்ரீ சக்கர வடிவில் 10008 நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் மக்கள் அமைதியாகவும் நோய் நொடிகள் இன்றி நலமுடன் வாழவும் மழை வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் வேண்டி நாராயணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து, ஸ்ரீ சக்கர வடிவில் 10008 நெய் தீபங்களை பொதுமக்கள் தங்களின் கைகாளலேயே ஏற்றி தீமை அழிந்து நன்மை பெருக வேண்டுமென வழிபாடு செய்தனர். இதில் தங்க கோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி துவங்கி வைத்து நாராயணி அம்மனுக்கு தீபாராதணைகளை செய்தார், ஸ்ரீ நாராயணி அம்மன ஊஞ்சல் சேவையும் பின்னர் 10008 தீபங்களுக்கு மகாதீபாராதனைக்களும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.