முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்; தீப ஒளியில் ஜொலித்த ஆறுமுக கடவுள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 12:10
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை மற்றும் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, விநாயகர் - சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. விழாவில் தீப ஒளியில் ஆறுமுக கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது