அன்னூர், சத்தி சாலையில், இந்திரா நகரில், பழமையான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் சக்தி விநாயகர், பட்டத்தரசி அம்மன், விநாயகர் மற்றும் அண்ணன்மார் சாமிகள் சன்னதிகள் உள்ளன. இங்கு பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிதாக பல்வேறு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 31ம் தேதி காலை அன்னூர் பாத விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலையில் புதிய விக்ரகங்கள் எடுத்து வரப்பட்டன. பாத விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. மாலையில் விக்ரகங்களுக்கு கண் திறக்கப்பட்டு, வேள்வி பூஜையும், சாமிகள் பிரதிஷ்டையும் நடந்தது. இன்று (3ம் தேதி) அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10:10 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மகாபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.