ஆயக்குடி சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 03:11
ஆயக்குடி; பழநி முருகன் கோயிலின் உப கோயிலான ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலின் உப கோயிலான ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்து. நவ., 2, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் அனுமதி பெறுதல் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு முதல் கால வேள்வி துவங்கியது. இரவு 7:00 மணிக்கு வேள்வி நிறைவடைந்தது. இரண்டாம் கால வேள்வி இன்று (நவ.,3) அதிகாலை 4:00 மணிக்கு துவங்கியது. காலை 6:00 மணிக்கு வேள்வி நிறைவடைந்து வேள்வியில் வைக்கப்பட்ட திருக்குடங்களை எடுத்து வந்து 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினர் நடத்தினர். அதன் பின் சோழீஸ்வரர் சுந்தரவல்லி மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தில் பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் துணை கமிஷனர் வெங்கடேஷ் உதவி கமிஷனர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.