கருநஞ்சுன்டேஸ்வரர் சுவாமி கோவிலில் மகா அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2025 02:11
கோவை; மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த கருநஞ்சுன்டேஸ்வரர் சுவாமி கோவிலில் மகா அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிக்கதாசம்பாளையம் கிராமம் மோத்தே பாளையத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த பவனேஸ்வரி தேவி உடனமர் அருள்மிகு ஸ்ரீ கருநஞ்சுன்டேஸ்வரர் சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேக திருவிழா நடைபெற்றது. இன்று காலை 9.15 மணிக்கு திருவிளக்கு வழிபாடு புனித நீர் வழிபாடு மகா கணபதி பூஜை தெய்வீக சிவத்தேன் தமிழால் ஆன திருவாசகம் தேவாரம் தமிழ் மகா மந்திரங்களின் திருமுறைகளால் கலச பூஜையும் வேள்வியும் சுவாமிக்கு மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமிக்கு மகா அன்னாபிஷேகம் நடைபெற்று அன்னாபிஷேக அலங்காரத்தில் கருநஞ்சுன்டேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திருமூலர் குடில் வீரசைவ மஹா குரு இயற்கை சொரூப சிவஞானசித்தர் புலவர் மதியழகனார் அருள் ஆசியுடன் கோபாலகிருஷ்ணன் சிவாச்சாரியார் முருகேசன் ஜோதிடர் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் மற்றும் யாக வேள்விகளை நடத்தினர். விழாவில் மோத்தேபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழுவினர் மற்றும் மோத்தேபாளையம் பொதுமக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.