Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளாவிய அகண்ட பஜனை; பாபா பக்தர்கள் ... உண்மையான மகிழ்ச்சியைக் காண விரும்பினால், நம் மனம் எதில் கவனம் செலுத்த வேண்டும்? சத்யசாய்பாபா உண்மையான மகிழ்ச்சியைக் காண ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2025
06:11

புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை கோலாகலமாக நடந்தது. . 


Default Image
Next News

சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவ., 23ம் தேதியை நுாற்றாண்டு விழாவாக உலகம் முழுதும் உள்ள பாபா பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 


இந்த நிகழ்வு, இன்று நவம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ந்து எங்கும் இல்லாத வகையில் அகண்ட பஜன் என்ற இடைவிடாத 24 மணி நேர பஜனையாக உலகெங்கிலும் நடைபெற்று வருகிறது. பக்தர் குழுக்கள் மாறி மாறித் தொடர்ந்து இந்த பஜனையை நடத்துவது சிறப்பாகும்.  இந்த ஆண்டு அகண்ட பஜனை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இன்று துவங்கியது. முன்னதாக காலை காலை 8:00 முதல் 9:00 மணி வரை வேதமந்திரம், காலை 9:00 - 9:30 மணி வரை பஜனை மற்றும் மங்கள ஆரத்தி, சாய் காயத்ரி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு வேதம் பாராயணம் நடைபெற்று, தொடர்ந்து உலகளாவிய அகண்ட பஜனை மாலை 6.00 மணிக்கு துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கடவுள் நாமங்களை பாடி வருகின்றனர். உலகளாவிய இந்த அகண்ட பஜனை 24மணி நேரம் தொடர்ந்து நடைபெறுவது குறிபிடத்தக்கது.


அகண்டநாம ஜபம் என்பது நேரம், காலம் பார்க்காமல் தொடர்ச்சியாக, பலர் கூடி கடவுள் நாமங்களை ஜபித்து பிரார்த்தனை செய்வதாகும். இதில் பங்கேற்றால் நல்வாழ்வு,  ஆயுள், செல்வ வளம் உண்டாகும். வாழ்விற்கு பிறகு மோட்ச கதியும் கிடைக்கும். இதில் பங்கேற்றால் நல்வாழ்வு,  ஆயுள், செல்வ வளம் உண்டாகும். வாழ்விற்கு பிறகு மோட்ச கதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 



நேரலையில் காண கிளிக் செய்யவும்...: https://www.youtube.com/watch?v=0HZnbhjUlyI


 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar