புட்டபர்த்தி; புட்டபத்தி, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவ., 23ம் தேதியை நுாற்றாண்டு விழாவாக உலகம் முழுதும் உள்ள பாபா பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். விழானை முன்னிட்டு முக்கிய தினமான நவ., 23ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று 8 ம்தேதி காலை 10:30 மணிக்கு 24 மணிநேர இடைவிடாத அகண்ட பஜனை துவங்கியது. உலகம் முழுவதும் உள்ள சாய் பக்தர்களால் இடைவிடாது பாடப்படும் இந்த பஜனை நாளை ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2025 காலை 10:30 மணி வரை நடைபெற உள்ளது.
இன்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் காலை காலை 8:00 முதல் 9:00 மணி வரை வேதமந்திரம், காலை 9:00 - 9:30 மணி வரை பஜனை மற்றும் மங்கள ஆரத்தி, சாய் காயத்ரி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு வேதம் பாராயணம் நடைபெற்று, தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு உலகளாவிய அகண்ட பஜனை ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் https://www.youtube.com/watch?v=tgOYJDhxOjg இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.