ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2025 12:11
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் திருவாய்மொழி சேவா காலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். நவம்பர் 14 வரை 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.