பதிவு செய்த நாள்
09
நவ
2025
12:11
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் இரவில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் தங்குவது வழக்கம். இதில், பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாவதால், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘கடற்கரை பகுதியில் இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை யாரும் தங்க அனுமதி இல்லை’ என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை, கோவில் பணியாளர்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வெளியேற்றினர். கோவில் முன் கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா கோவில் வரை கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில் வளாகங்கள், அங்குள்ள மண்டபங்களில் தங்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதற்கிடையே, காவல் துறை தரப்பில், கடற்கரையில் பக்தர்கள் தங்க எந்த தடையும் விதிக்கவில்லை என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது