Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல காலம் துவங்கியது; ... சபரிமலையில் முதல் நாளில் அலைமோதும் பக்தர்கள்; இருமுடி கட்டுடன் குவிந்தனர் சபரிமலையில் முதல் நாளில் அலைமோதும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்; சன்னிதானத்தில் இன்று அறிவியல்பூர்வ ஆய்வு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தங்கம் திருட்டு விவகாரம்; சன்னிதானத்தில் இன்று அறிவியல்பூர்வ ஆய்வு

பதிவு செய்த நாள்

17 நவ
2025
12:11

பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, இன்று அறிவியல்பூர்வ சோதனையை நடத்துகிறது. இதற்காக விசாரணை குழுவினர் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.


சோதனை கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. மண்டல – மகர விளக்கு காலங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை இன்று துவங்குகிறது. இந்நிலையில், சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்ட வழக்கில், பெங்களூரு தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துவாரபாலகர் சிலைகளில் இருக்கும் தங்கத்தின் தரம், செப்பு தகடுகளின் அடர்த்தி ஆகியவை குறித்து ஆராய, அறிவியல்பூர்வ சோதனை நடத்த வேண்டும் என, சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. அனுமதி இதற்காக துவாரபாலகர் சிலைகளில் இருக்கும் தங்கத்தின் மாதிரியை எடுத்து சோதனை நடத்த, கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அதற்கு ஒப்புதல் அளித்த கேரள உயர் நீதிமன்றம், மண்டல பூஜை காலம் துவங்குவதற்கு முன்பாக, இந்த சோதனையை முடிக்கும்படி அறிவுறுத்தி இருந்தது. எனினும், தேவ பிரசன்னம் பார்க்காமல், இந்த சோதனையை நடத்த அனுமதிக்க முடியாது என, சபரிமலை கோவில் தந்திரி கூறினார். இதையடுத்து, தந்திரியின் அறிவுறுத்தலின்படி, தேவபிரசன்னத்திற்கு பின், சபரிமலையில் இன்று உச்ச பூஜை முடிந்து, மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டதும், அறிவியல்பூர்வ சோதனை நடத்தும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், தடயவியல் நிபுணர்கள், ரசாயன வல்லுநர்கள் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar