Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர், ந.வைரவன்பட்டி ... திருவண்ணாமலை தீப திருவிழா தடங்கலின்றி நடக்க வேண்டி துர்க்கையம்மன் உற்சவம் திருவண்ணாமலை தீப திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பஞ்சாமிர்தம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கு மேல் ஜார்கள் விற்று சாதனை; 4 மணி நேரமும் தயாரிப்பு பணி
எழுத்தின் அளவு:
பழநி பஞ்சாமிர்தம் ஒரே நாளில் 2 லட்சத்துக்கு மேல் ஜார்கள் விற்று சாதனை; 4 மணி நேரமும் தயாரிப்பு பணி

பதிவு செய்த நாள்

21 நவ
2025
06:11

பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நவம்பர் 20 ஆம் தேதி 2, 65,940 பெட் ஜார்கள் விற்று சாதனைப்படைத்து உள்ளது.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வாழைப்பழம், நாட்டுசக்கரை, பேரிச்சம்பழம், ஏலக்காய், தேன், கற்கண்டு, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும், பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழநி கோயில் பஞ்சாமிர்தம் உலகப் பிரசித்தி பெற்றது. பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் இதற்கான தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதார முறையில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு டின், பெட் ஜார்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. 470 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டின்., ரூ.45, பெட் ஜார்., ரூ.40, 200 கிராம் எடையுள்ள பெட் ஜார் ரூ. 20 விலைகளில் விற்கப்படுகிறது.


பழநி வரும் பக்தர்கள் அதிக அளவில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த விற்பனையை அதிகப்படுத்தியது. இதற்கென 15 நிரந்தர பஞ்சாமிர்த விற்பனை மையங்கள், ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் அமைக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2023ல் டிச., 27., ல் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 283 பஞ்சாமிர்த ஜார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2025) நவ., 19ல் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 480 ஜார்கள் விற்பனையானது. இந்த விற்பனை சாதனையை ஒரே நாள் இடைவெளியில், நேற்று முன்தினம்(நவ., 20) ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 940 ஜார்கள் விற்கப்பட்டுள்ளது. இது இதுவரை விற்கப்பட்டுள்ள விற்பனையில் அதிக அளவு ஒரே நாளில் விற்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரம் காரணமாக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar