நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தில் உள்ள சத்ய சாய் நிவாஸ் அறக்கட்டளை சார்பில் நேற்று சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ழாவையொட்டி, கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த யானையின் மீது சாய் சிலை வைக்கப்பட்டு, மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து உபதலை சாய் நிவாஸ் வரை ஊர்வலம் நடந்தது. பிறகு, சாய் நிவாஸ் கோவிலில் இருந்து, கெந்தொரை சாய் ஆஸ்ரமம் வரை 2. கி.மீ., தூரம் சாய்பாபா தேர் மற்றும் சாய் பக்தர்களின் பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. செண்டை மேளம், நாதஸ்வரம், குரும்பா பழங்குடியினரின இசை, பேண்ட் வாத்தியம் முழங்க, சாய்பாபா வேடமணிந்த குழந்தைகள், படுக பாரம்பரிய உடை அணிந்த குழந்தைகள் உட்பட படுக மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாய் படங்கள் ஏந்தியும், வண்ண குடைகள் எடுத்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் 99 சிறுவர் சிறுமியர் கைகளில் வைத்திருந்த கேக் வெட்டி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேடையில் 11 கிலோ கொண்ட 100வது கேக், சாய் நிவாஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் மாதா ஜி யசோதா, சுவாமி நவீன் சாய், மேகநாத் சாய் ஆகியோர் வெட்டினர். சாய் வரலாறு குறித்த கண்காட்சி இடம் பெற்றது. தொடர்ந்து பக்தி பஜனை, வழிபாடுகள், ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம், பிரசாத விநியோகம், நடந்தது. விழாவில் ஆன்மீக பெரியோர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவையொட்டி உபதலை கிராமமே விழா கோலம் பூண்டிருந்தது.