Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ... பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் யாகசாலை அமைக்கும் பணி பழநி லட்சுமி நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம்

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பழங்கால கல் நாதஸ்வரம் பெட்டகத்தில் பாதுகாப்பட்டு வருகிறது. சாதாரண மர நாதஸ்வரம், 600 கிராம் எடையில் இருக்கும். ஆனால், இது அதைவிட ஆறு மடங்கில், 3.600 கிலோ எடை, 2.5 அடி நீளம் கொண்டது. இந்த நாதஸ்வரத்தில் 2 அங்குல உயரமுள்ள திமிரி சீவாளி உள்ளது.


வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தை கொண்ட இந்த கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது, மூன்று உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு, வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டவை. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் ஆறு ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். எனவே, சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். சங்கராபரணம், கரகரப் பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தில் வாசிக்க முடியாது. மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளையால், 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. பிறகு, கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளையால் 30 ஆண்டுகளுக்கு மேல் வாசிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார். இறுதியாக கல்நாதஸ்வரம், 2017, செப்., 30 அன்று, சுவாமிநாதனால், ஒரு மணி நேரத்தில் நான்கு கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் டிச., 1ம் தேதி நடைபெறும் நிலையில், மூன்றாம் கால யாகசாலை பூஜையின் போது, சுவாமிநாதனின் தம்பி மகன் தமிழரசன், மாலை 5:37 மணிக்கு துவங்கி 6:03 மணி வரை, 26 நிமிடங்கள், அமிர்தவர்சினி, அம்சநாதம், சாரங்க, சரஸ்வதி ஆகிய நான்கு ராகங்களை கல் நாதஸ்வரத்தில் இசைத்தார். பிறகு அவர், கோவில் செயல் அலுவலர் முருகனிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar