Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளப்பெருக்கு; அமணலிங்கேஸ்வரர் ... வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல் வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சேவூர் பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 நவ
2025
12:11

அவிநாசி : சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேவூரில், பழமை வாய்ந்ததாக போற்றப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகள் தொடர்ந்து நடந்தது. கி.பி. 12-ம் நுாற்றாண்டுக்கு முன்பு, கொங்குச் சோழர்களால் கோவில் கட்டுமானம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது. கொங்கு பாண்டியர்கள் காலத்தில், வட பரிசர நாட்டின் செம்பியன் கிழாநதி நல்லுார் என அழைக்கப்பட்டது.


சோழர்களும் பாண்டியர்களும் வழிபட்டு வந்த புராதனமிக்க இக்கோவிலில், சொர்க்கவாசல் அமைத்து மதில் சுவர் கட்டுதல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர் கட்டுதல், கோவில் வளாகத்திற்குள் நடைபாதை கல் தளம் அமைத்தல், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன்பு ஓட்டுக்கரை மண்டபம் அமைத்தல், புதிய மடப்பள்ளி அமைத்தல் ஆகிய கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகளை, உபயதாரர்கள் மூலம் அறநிலையத் துறையினர் மேற்கொண்டனர்.


இன்று காலை 7:45 மணிக்கு விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், 8:25 மணிக்கு மூலஸ்தானத்திற்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் தசதானம், தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடைபெறும். சேவூர் ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு காலை 7:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar