அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை மாத மஹா தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதனை முன்னிட்டு கோவிலில் ராஜகோபுரம், அம்மன் கோபுரம், கொடிமரம், தீபஸ்தம்பம் உள்ளிட்ட இடங்களில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ‘அண்ணாமலைக்கு அரோகரா’ கோஷமிட்டு எம்பெருமானை வழிபட்டனர்.