திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் ஆராதனை விழா நடந்தது.திருக்கோவிலூர், ஞானா னந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் சுவாமிகளின் 31வது ஆராதனை விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தினசரி பாதபூஜைகள், ஹோமம், பாரா யணம், அகண்டதாரா நாம ஜபம், பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது.ஆராதனை தினமான நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, சிறப்பு அதிஷ்டான பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.மதியம் 1.30 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜைகள் நடந்தது. இரவு 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுப்புராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.