கார்த்திகை நான்காம் சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2025 11:12
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் சிவபெருமான் உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.