கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை சஷ்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2025 04:12
கோவை; கார்த்திகை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ஆர் .எஸ் . புரம் வின்சென்ட் காலனி உழவர் சந்தை அருகே அமைந்துள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் முருக பெருமான் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு வள்ளி தேவசேனா சமேதராக காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.