வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ. 1.88 கோடியில் கருங்கல் தரைத்தளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2025 03:12
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ. 1.88 கோடி மதிப்பில் கருங்கல் தரைத்தளம் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
திருக்கோவிலுார் , கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கடந்தாண்டு ரூ. 2.09 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோவிலின் முன் பிரகாரத்தில் கருங்கல் தரைத்தளம் அமைக்க ரூ. 1.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்பார்வை செய்து வருகின்றனர். மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அன்னகூடம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்குப்பின் முன்பிரகாரத்தில் உள்ள வசந்தமண்டபம் புனரமைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கருங்கல் தரைத்தளம், வடிகால் வசதியுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.