திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 04:12
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.