அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவிலில் லட்சார்ச்சனை வேள்வி பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2025 10:12
பொங்கலூர்; அலகுமலை ஆதி கைலாசநாதர் சுவாமி திருக்கோவிலில் மகா தேவாஷ்டமி பூஜை மற்றும் லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு மிகவும் உகந்தது. இது மகா தேவாஸ்டமி என அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அலகுமலை பிருஹன் நாயகி அம்மன் சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் கோவிலில் தேவாஷ்டமி பூஜை நடந்தது. கோவில் திருக்கோவில் அர்ச்சகர்கள் சத்யோஜாதசிவம் மற்றும் வாமதேவ சிவம் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத காலை கணபதி வேள்வி, லட்சார்ச்சனை, மாலை யாக வேள்வி, மகா அபிஷேகம், மலர் மாலை அலங்காரம் நடந்தது. பின் பைரவர் வாகனத்தில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.