Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் வீடுகளில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா 25 ம் தேதி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா 25 ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

22 டிச
2025
05:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி துவங்குகிறது.


சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு வரும் 25 ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில், சந்திரன், சூரியன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.  புத்தாண்டு தினத்தன்று தங்க தேரில், சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.  தேர் திருவிழா, வரும், ஜன., 2 ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தேரோட்டம் முடிந்து, சுவாமி ஆயிரங்கால் முன் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து, இரவில், ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில், நடராஜர் சிவகாம சுந்தரிக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். தொடர்ந்து, அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.  பின்னர், காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர், மதியம் 3:00 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.  வரும், 4 ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா, 5 ல்  ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் 10 நாள் உற்சவம் நிறைவு பெறகிறது.  விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar