Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதியில் பாரம்பரிய முறைப்படி ...
முதல் பக்கம் » செய்திகள்
பக்தியின் மூலம் எம்பெருமானை அறியும் ஞானம் பெறலாம்
எழுத்தின் அளவு:
பக்தியின் மூலம் எம்பெருமானை அறியும் ஞானம் பெறலாம்

பதிவு செய்த நாள்

23 டிச
2025
10:12

புதுச்சேரி: பக்தி எனும் மத்தினால் பகவத் அனுபவம் எனும் தயிரைக் கடைந்தால் எம்பெருமானை அறியும் ஞானம் என்னும் வெண்ணெய் திரண்டு வரும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.


முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத உபன்யாசத்தின் 7 ம் நாளான நேற்று, முன்னாள் நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: எம்பெருமானின் பன்னிரண்டு திருநாமங்களில் முதல் இரண்டு திருநாமங்கள் “கேசவன்“, “நாராயணன்’’ என்ற திருநாமங்கள் என்பதால் “நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்“ என்று இந்த முதல் திருநாமங்களைச் சொல்லி கோதைப் பிராட்டி இந்தப் பாசுரத்தில் அருளியுள்ளது இப்பாசுரத்தின் சிறப்பு. திருப்பாவையில் நாராயணன் என்ற திருநாமத்தை 3 பாசுர வரிகளிலும், கேசவன் என்ற திருநாமத்தை 2 பாசுர வரிகளிலும்ஆண்டாள் போற்றியுள்ளார். திருப்பாவையும் சேர்த்து, திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 11 பாசுரங்களில் நாரயண நாமமும், 24 பாசுரங்களில் கேசவன் என்ற திருநாமமும் சொல்லப்பட்டுள்ளது. திருப்பாவையின் 7ம் பாசுரத்திலும் செவிக்கும், மனதிற்கும் இனிமை தரும் மங்கள சப்தங்களான கீச்சு கீச்சு “என்று ஆனைச்சாத் தன் குருவிகள் கிரீச்சிட்டு எழுப்பும் ஒலிகள், ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போது, ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் அசைவதால் கலகலவென்று எழும் ஓசை, தயிர் கடையும் போது எழும் மத்தின் சப்தம், கேசவா நாராயணா என்ற நாம சங்கீர்த்தன பேரரவம் என்று மனத்திற்கும் செவிக்கும் இனிமையான அந்த சப்தங்களைக் கோர்த்து மாலையாக்கி பாமாலையாகப் பாசுரத்தை அமைத்துள்ளாள் ஆண்டாள். இந்த பரமானுபவத்தை ஸ்வாமி தேசிகனும் கோபால விம்சதியில் அழாகாகச் சொல்லியுள்ளார். அதாவது பக்தி எனும் மத்தினால் பகவத் அனுபவம் எனும் தயிரைக் கடைந்தால் எம்பெருமானை அறியும் ஞானம் எனும் வெண்ணெய் திரண்டு வரும். அந்த ஞானமே நம் உஜ்ஜீவனம் என்று ஆண்டாள் குறிப்பாக உள்ளுரைப் பொருளாக இந்த பதங்களில் உணர்த்துகிறாள் என்றார். 

 
மேலும் செய்திகள் »
temple news
கமுதி: கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஆத்ம சமர்ப்பணம் செய்து எம்பெருமானை உள்ளத்தில் கொள்ள வேண்டும் என, ஓய்வு பெற்ற நீதிபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தேசமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி நடந்தது. உப்பளம், நேத்தாஜி ... மேலும்
 
temple news
குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி கர்நாடக இசைக் கலைஞர் பூஜா சுரேஷ். இவர், மந்தாரி வர்ணம், ஆதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசியிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி பெருவிழா, கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar