கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2025 10:12
கமுதி: கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை நடக்கிறது. கமுதி ராமானுஜ பஜனை மடத்தில் பஜனை குழு சார்பில் மார்கழி மாதத்தில் மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவி வைத்து திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர். பஜனை மடத்தில் துவங்கி காமாட்சி அம்மன், காளியம்மன், விநாயகர், ஆஞ்சநேயர், பெருமாள், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனைப்பாடல்கள் பாடி மார்கழி மாத வழிபாடு செய்து வருகின்றனர். கவுரவ செட்டியார் உறவின்முறை டிரஸ்ட்டி, ராமானுஜ பஜனை குழு மற்றும் கவுரவ இளைஞர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.