Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பஞ்சாமிர்ததிற்கு ... திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு! திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து உயிர்களுக்கும் படியளக்க நாளை அஷ்டமி சப்பரம் உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
10:01

மதுரை: மதுரையில், அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் வகையில், நாளை(ஜன.,5) அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருகின்றனர். ஒரு சமயம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். இந்நிகழ்ச்சி நாளை நடக்கிறது.  அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதிக்கு வருகின்றனர். அங்கு சப்பரங்களில் எழுந்தருளி, யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் ரோடு, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, காமராஜர் ரோடு, விளக்குத்தூண் வழியாக தேரடிக்கு வருகின்றனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளப்பதற்காக, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவ உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar