Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி; ... களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட சிவாலயம் காஞ்சி விஜயேந்திரர் திறந்து வைத்து ஆசியுரை களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் ஐயப்பன் கோவில் தேர் பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னூர் ஐயப்பன் கோவில் தேர் பவனி

பதிவு செய்த நாள்

29 டிச
2025
12:12

குன்னூர்; குன்னூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழாவில், கலாரூபம் ஆட்டத்துடன், செண்டை மேளம் முழங்க ஐயப்பன் பவனி வந்தார்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் ஐயப்பன் கோவிலில், 59வது ஆண்டு மண்டல பூஜை 26ல் துவங்கியது. விழாவில், திருவிளக்கு பூஜை, அன்னதானம், படி பூஜை, ராக்கால பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம் நடந்தது.காலை 11:00 மணியளவில் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குட ஊர்வலம் செண்டை மேளம் முழங்க ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.. ஐயப்பனுக்கு பாலபிஷேகம், கலபாபிஷேகம் மற்றும் தேன், பன்னீர், பஷ்மம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து, புஷ்ப அலங்காரத்தில் செண்டை மேளம் முழங்க, திருவீதி உலா புறப்பட்டது. இதில் பாலக்கொம்புடன், புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வந்தார். ஸ்ரீ கிருஷ்ணா பிரதீனா குழுவினரின் கலாரூபம் ஆட்டம் இடம் பெற்றது. தாளப் பொலி விளக்குகள் ஏந்தி சிறுமியர், மகளிர் ஊர்வலமாக வந்தனர். கோவிலில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, வி.பி தெரு, மவுன்ட்ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு புஷ்ப அலங்காரம் இடம் பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன., 14ல், மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை குன்னூர் ஐயப்ப பக்த சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar