கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 03:01
கன்னியாகுமரி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அனைத்து சன்னிதிகளிலும் வழிபட்ட அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை, பிரசாதம் வழங்கப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- இன்றைய தினம் 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை சிறப்புடன் வரவேற்க அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் குடும்பத்துடன் வழிபாடு செய்தேன். இந்த 2026 ஆம் ஆண்டு மக்கள் அனைவருக்கும்மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நல்ல முன்னேற்றத்துடனும் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.