ஜம்புலிப்புத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், காலபைரவர், நவக்கிரக சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், காளியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன், மேல விநாயகர், மங்கள விநாயகர், ராஜ விநாயகர், பகவதி அம்மன், நன்மை தருவார் ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.