சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில், கீழ் சபரி ஐயப்பன் கோயில் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் கோயில்கள் உள்ளன. கோயிலின், 51ம் ஆண்டு மண்டல பொதுபூஜை விழா, சிறப்பு பூஜையுடன் துவங்கியது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. 6:00 மணிக்கு ஐயப்பன் சுவாமிக்கு அஷ்டபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு பஞ்சாபிஷேகம் சிறப்ப பூஜைகள் நடந்தன. கோயில் நம்பூதிரி அஜயன் சிறப்பு பூஜைகளை செய்தார். அதைத் தொடர்ந்து, மகிழ்ச்சி மகரிஷி மருந்தன மூர்த்தி எங்கள் ஐயப்பனின், என்ற தலைப்பில், கோவை கணேசபுரம் புவனேஸ்வரியின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் ஸ வழங்கப்பட்டது. மண்டல பொது பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர்ம்பண செய்து வருகின்றனர்.