பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 01:01
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை உற்ஸவ விழாவில் அம்மன் பொன்னுாஞ்சலில் எழுந்தருளினார்
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் 2025 டிச.25ல் மாலை சாயரட்சை பூஜையுடன் அம்மனுக்கு காப்பு கட்ட திருவாதிரை உற்ஸவ விழா துவங்கியது. இதை தொடர்ந்து நேற்று மாலை அம்மன் பொன்னுாஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 20 திருவாசகப் பாடல்கள் பாட ஊஞ்சல் உற்ஸவம் நடை பெற்றது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.