மணியக்காரன்பட்டியில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 01:01
கோபால்பட்டி: கோபால்பட்டி மணியக்காரன்பட்டியில் ஹரிஹர சுதன் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 28 ஆம் ஆண்டு பூக்குழி இறங்கும் விழா நடந்தது. மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், ஊர் மக்கள் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து வழிபட்டனர். பின் மணியக்காரன்பட்டி பகவதி அம்மன் கோயில் முன் பூக்குழி இறங்கும் பக்தர்களின் பாதங்களில் பால் ஊற்றி பாத பூஜை செய்ய பூக்குழி இறங்கினர். மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி பிராத்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.