சிவாலயத்தில் எங்கும் இல்லாத வகையில் நடராஜரை சுமந்து வலம் வந்த பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 03:01
மயிலாடுதுறை: தமிழகத்தில் எங்கும் இல்லாத வழக்கமாக பெண்கள் மட்டும் பங்கேற்று ஆண்டுக்கு ஒரு முறை பல்லக்கில் இறைவனை சுமக்கும் நிகழ்வு, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலங்குடி சிவாலயத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கச்ச பரமேஸ்வர கோயில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பெண்கள் உதவியால் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் இந்தக் கோயிலில் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வழிபாட்டிற்கு வந்த பெண்கள் பல்லக்கில் நடராஜப் பெருமானை தூக்கிக்கொண்டு கோவிலில் உள்ள பிரகாரங்களில் வலம் வந்தனர் . மேலும் ஏராளமான பெண்கள் இந்நிகழ்வில் பங்கு கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று பெண்கள் மட்டுமே நடராஜரை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்து வருவது இங்கு மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.