தெப்பத்தேரில் பவனி வந்து அருள்பாலித்த அன்னூர் மன்னீஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 03:01
அன்னூர்; அன்னூரில் தேர்த்திருவிழாவில் மன்னீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், 26ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு கோவிலில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு அலங்கார பூஜை நடந்தது. கட்டளைதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில், அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர், மூன்று முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் மன்னீஸ்வரருக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். வானவேடிக்கை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நாட்டுப்புறப் பாடல்களுக்கு நளினமாக ஆடும் கம்பத்தாட்டம் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர் உள்பட பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.