திருக்குளம் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 04:01
திட்டக்குடி; திருக்குளம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திட்டக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் திருக்குளம் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த 2022ல் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டன. திருக்குளம் சீரமைக்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில், ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணி துவங்கியது. திருக்குளம் சுற்றுச்சுவர், நடைபாதை பணிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. மந்தமாக நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.