மேட்டுப்பாளையம் காரமடை சாலை, சிவன்புரத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 35வது மண்டல மகோற்சவ விழா கடந்த 2ம், தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஐயப்பன் சுவாமிக்கு, சுற்று விளக்கு, திருவிளக்கு வழிபாடு, நிறைமாலை, புஷ்பாபிஷேகம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு, கோயிலில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிக்கும், கொடி மரத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்பு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமியின் ஆசியுரையும், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. விழாவில் முன்னாள் நகர மன்ற தலைவர் சதீஸ்குமார், இன்ஜினியர் காமராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதியின் தலைவர் அச்சுதன் குட்டி, செயலாளர் சத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.