திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் திருப்பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2026 02:01
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி, திருப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், பிரமாண்டமான யாகசாலை அமைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லோகாம்பிகை சமேத பாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல், உள்பிரகாரம், கிரிவலப்பாதை, மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் திருப்பணிகள் பெரும்பாலனவை முடிந்துள்ள நிலையில், வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்காக, கோவில் பிரகாரத்தில் பிரமாண்டமான யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இங்கு, பாலீஸ்வரருக்கு ஒன்பது குண்டங்களுடன் பஞ்சாசனம் வேதிகை, அம்பாளுக்கு ஒன்பது குண்டங்ககளுடன் ஸ்ரீசக்கர வேதிகை, விநாயகருக்கு, ஐந்து குண்டங்களுடன் கஜேந்திர வேதிகை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, 20 வேதிகைகள் அமைக்கப்படுகின்றன. திருச்செந்துார் முருகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசைாலை அமைத்த ரத்னவேல் ஸ்தபதி தலைமையில் பணி நடைபெறுகிறது. ஹிந்து அறநிலைய அதிகாரிகள் மற்றும் திருப்பணிக்குழுவினர் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.