பாலக்காடு; பாலக்காட்டில் தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
கேரள மாநிலம் பாலக்காடு நகரில் உள்ள பகுதி அய்யபுரம். தமிழ் மக்கள் அதிக அளவில் குடியிருக்கும் இங்கு நேற்று பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினர். மாலை கீழ் தெருவு மகா கணபதி கோவில் வாசல் முன் வண்ண வண்ண கோலமிட்டு, புது பானையில் புத்தரிசி இட்டு, பாரம்பரிய உடையுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக காலை சூரியன் உதிக்கும் முன்பே, பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைத்து, சூரிய பொங்கலாக பகுதி மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள வீட்டினருக்கு பொங்கல் வழங்கினர். கால்நடைகளுக்கும் உணவு கொடுத்தனர். மாட்டுப் பொங்கல் தினமான இன்று கல்பாத்தி சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோபூஜை நடந்தது.