திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு உற்சவர் வீதியுலா நடந்தது. ஏற்பாடுளை கோவில் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் செய்திருந்தார்.