முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் சர்ச் திருவிழா சப்பர பவனி நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2026 12:01
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை புனித வனத்து அந்தோணியார் சர்ச்சில் திருவிழா நடந்தது. ஜன.,8 மாலை 5:30 மணிக்கு புனித அந்தோணி யார் சர்ச் முன்பு கொடி மரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.
நேற்று முன்தினம் வெள்ளி மாலை 5:30 மணிக்கு புனித வனத்து அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட சொரூபம் சப்பர பவனியாக முத்துப்பேட்டை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தது. மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்த சப் பரம் முத்துப்பேட்டை வீதிகளில் வலம் வந்தபோது ஏராளமானோர் இறை பாடல்களை துதி பாடினர்.
நேற்று காலை 5:30 மணிக்கு அந்தோணியார் சர்ச்சில் சிறப்பு திருப்பலியும் நேற்று மதியம் 3:00 மணிக்கு பொங்கல் விழா நடந்தது. ஏராளமானோர் கோயில் முன்பு பொங்கல் வைத்து பூஜை செய்தனர். வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை முத்துப்பேட்டை பங்குத்தந்தை சவரி முத்து செய்தார். அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.