கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தச்சன் ஊருணி அருகே உள்ள பழமை வாய்ந்த செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் புதிதாக திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு நவ., 30ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தி யானதை முன்னிட்டு மூலவர் பூரண புஷ்கலா சமேத செங்காட்டுடைய அய்யனாருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
முன்னதாக காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை வழிபாடு, மகா பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் புனித நீர் ஊற்றி பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு கோயில் வளா கத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை நட்டாத்தி சத்திரிய குல ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் குலதெய்வ வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.