பழநி பெரியநாயகி அம்மன் கோயில் சண்முக நதியில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 02:01
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து சண்முக நதியில் எழுந்தருளி அஷ்ட தெய்வ தீர்த்தவாரி நடந்தது.
இக்கோயிலில் இருந்து தை அமாவாசை தினமான நேற்று அஷ்ட தெய்வம் அலங்கரிக்கப்பட்டு, சண்முக நதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அபிஷேக பூஜைகளுக்கு பின், சண்முக நதியில் தீர்த்தவாரி நடந்தது. அதன்பின் தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி முடிந்து அஷ்ட தெய்வம் கோயிலுக்கு பல்லாக்கு மூலம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. பின் நேற்று மாலை ரிஷப வாகனத்தில் சிவபெருமான், பார்வதி உற்ஸவ மூர்த்தி, நான்கு ரத வீதியிலும் வீதியுலா நடந்தது.