தேவகோட்டை; தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகரில் உள்ள மகா சக்தி பிருத்தியங்கிரா தேவி கோயிலில் இரு. தினங்கள் நவ சண்டி மகா யாக பூஜைகள் நடைபெற்றன. கணபதி ஹோமம் தொடங்கி விக்னேஸ்வர பூஜையில் அஷ்டலட்சுமி பூஜை, மாத்ருகா பூஜை, தீபஸ்தாபனம், சப்ததி புத்தக பூஜை,தேவதா பலி பூஜை, நவாவரண, நவாக்ஷிரி, 64 யோகினி, 64 பைரவ பலி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நவ சண்டி ஹோமம், கன்னிகா பூஜை வடுக பூஜை சுமங்கலி பூஜை உட்பட பல சிறப்பு யாக ஹோமம் பூஜைகள் நடந்தன பூர்ணாகுதியை தொடர்ந்து மகா சக்தி பிருத்தியங்கிரா அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் திபாராதனைகள் நடந்தன. மேலும் கோயில் வளாகத்தில் உள்ள அட்சய மகா கணபதி, அத்தி வாராஹி அம்மன், ஸ்வர்ண பைரவர், அனுக்கிரஹ பாபா உட்பட அனைத்து சுவாமிகளுக்கு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. கோயில் நிர்வாகி வள்ளீஸ்வர சிவாச்சாரியார் ஏற்பாடுகளை செய்து வழி நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடத்தப்பட்டது.