திருப்பதியில் புரந்தரதாசர் மூன்று நாள் ஆராதனை விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 05:01
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகித்ய திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று திங்கட்கிழமை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய தாச சாகித்ய திட்டத்தின் சிறப்பு அதிகாரி ஸ்ரீ ஆனந்ததீர்த்தாச்சார்யா, மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் கடந்த பிறவிகளின் கர்மவினைகளின் விளைவே என்று கூறினார். மகான்களை சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இறைவனுக்கு சேவை செய்வதன் மூலம் முக்தியை அடையலாம் என்று அவர் கூறினார். மேலும், நாரதரின் அவதாரமாகத் திகழ்ந்த ஸ்ரீ புரந்தர தாசரால் மட்டுமே தனது வாழ்நாளில் 4.75 லட்சம் பக்திப் பாடல்களை இயற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். புரந்தர தாசரின் அனைத்துப் படைப்புகளும் சிறப்பு மிக்கது. அவரது வாழ்க்கை மனிதகுலத்திற்கு ஒரு முன்மாதிரி என்றும் அவர் கூறினார். இவ்விழாவில ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பஜனை மண்டலி உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.