நரிக்குடி சிவன் கோயிலில் திருப்பணிக்கான கால்கோள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2026 05:01
நரிக்குடி; எஸ். கல்விமடை சிவன் கோயிலில் திருப்பணிக்கான கால்கோள் விழா நடந்தது.
நரிக்குடி எஸ்.கல்விமடையில் ஆயித்து 500 ஆண்டுகள் பழமையான திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ரூ. 2. 10 கோடியில் திருப்பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின் சிவனடியார்கள் சார்பில் ரூ. 15 கோடி நிதிகள் திரட்டப்பட்டு, சில மாதங்களுக்கு பாலாலயம் நடந்தது. நவம்பரில் புதிய கருங்கல் ஆலய பாலக்கால் பூஜை, நேற்று திருப்பணி துவக்க கால்கோள் விழா நடந்தது. பூரணாகதி, கலசபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.