காவிலிபாளையம் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது
பதிவு செய்த நாள்
20
ஜன 2026 12:01
திருப்பூர்: காவிலிபாளையம், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது. கும்பாபிேஷக விழா பூஜைகள், 18ம் தேதி துவங்கியது. யாகசாலையில், முதற்கால வேள்வி பூஜை, நேற்று துவங்கியது. மாலையில் நடந்த முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை, மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்க உள்ளது. நாளை அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜையும், காலை, 6:30 முதல், 7:20 மணிக்குள், விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. தொடர்ந்து, அன்னதானம் நடக்க உள்ளது. காலை, 7:25 மணிக்கு, மாரியம்மனுக்கு நான்காம் கால வேள்வி பூஜையும், அதனை தொடர்ந்து, காலை, 9:15 மணி முதல், 10:00 மணிக்குள், மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதன்பின், மஹா அபிேஷகம், அலங்காரம், தசதானம், தசதரிசனம், உச்சிகால பூஜைகள் நடக்க உள்ளன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று ஆதிலிங்கம் – மாவீரன் வீர சிலம்பாட்டபயிற்சி பள்ளியின் சிலம்பாட்டம், இன்று மாலை ஆதன் பொன் செந்தில்குமாரின் ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், நாளை, நவீன் பிரபஞ்ச நடனக்குழுவின் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்ட நடன நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர், பவுர்ணமி மகளிர் குழுவினர் மற்றும் காவிலிபாளையம் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
|