பதிவு செய்த நாள்
07
ஜன
2013
10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ள வீரவசந்தவராய மண்டபத்தில், விரிசல் தூண்களுக்கு பதில், புதிய கற்தூண்களை பொருத்தும் பணி இன்று(ஜன.,7) துவங்குகிறது.இக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது, விடுபட்டு போன சில பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. செப்.,26ல், பொற்றாமரைக்குள தென்கிழக்கு மூலை மண்டபத்தில், பழுதான 72 கல்தூண்களுக்கு பதில், ரூ.3.50 கோடியில் புதிதாக பொருத்தும் பணி துவங்கியது. இதேபோல், கிழக்கு கோபுரத்திலிருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தவராயர் மண்டபத்தில், 10க்கும் மேற்பட்ட தூண்கள் விரிசல் அடைந்தன. இக்கற்களை அகற்றி, ரூ.29 லட்சத்தில் புதிய தூண்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கர்நாடகா மாநிலம் கொய்லாராவில், கற்கள் எடுக்கப்பட்டன. விரிசல் தூண்களை பாதுகாப்புடன் அகற்றும் பணி டிச.,11ல் துவங்கியது. முழுமையாக இப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று புதிய கற்தூண்கள் பொருத்தும் பணி துவங்குகிறது. இப்பணியை 4 மாதத்தில் முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.